போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும், அவருக்கு துணை சென்றவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முனியப்பன், 37. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 42, என்பவர் மூலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்ற பெயரில், போலியாக ஆதிதிராவிடர் ஜாதி சான்று மற்றும் கல்வி சான்று பெற்று, குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், வேலூர் மாவட்டம், எர்ரம்பட்டி அரசு பள்ளிக்கு இடமாறுதலில் சென்ற முனியப்பனின் கல்வி, ஜாதி சான்றிதழ் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் படி விசாரித்தபோது, இவர் சான்றிதழ் போலி என்பது தெரிந்தது. தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார், முனியப்பன் அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த ராஜேந்திரன் ஆகிய, இருவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைந்தனர். இந்நிலையில், முனியப்பன், ராஜேந்திரன் ஆகியோர், தங்களுக்கு ஜாமின் வழங்குமாறு, பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன், அவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.