Pages

Wednesday, January 13, 2016

பிளஸ் 2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதிலளிக்க ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஜன.18 முதல் 28 வரை (பாட வாரியாக) தொலைக்காட்சி வழியாக ஆசிரியர்கள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது: விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் மொத்தம் 24,140 பேர் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவிதத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கான சிறப்பு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றது. அதன் காரணமாக இந்த ஆண்டும் மாணவர்கள் தேர்ச்சி சதவிதத்தை அதிகரிக்க பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறோம். அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும் திறன் மிக்க ஆசிரியர் குழுவை தயார் படுத்தியிருக்கிறோம். இவர்கள், ஜன.18 முதல் 28 வரை "ஐ' தொலைக்காட்சியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆசிரியர் குழுவினரிடம், பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிககள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஜன.18இல் வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல், 19இல் இயற்பியல், 21இல் வேதியியல், 22இல் வரலாறு மற்றும் பொருளியல், 23இல் உயிரியல், தாவரவியல், விலங்கியல், 27இல் கணிதம், 28இல் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.