Pages

Friday, December 18, 2015

நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க தமிழக அரசு டிசம்பர் 13-இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. 


அதில், ஒரு நாள் அல்லது விரும்பும் நாள்களைத் தெரிவித்து அதற்கான தொகையைப் பிடித்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கலாம். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அளிக்க வேண்டும். தொகையைப் பிடித்தம் செய்து அதற்கான காசோலையையும், ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் சம்பந்தப்பட்ட துறைக்கே கருவூலம்-கணக்குத் துறை அதிகாரிகள் அனுப்பி வைப்பர்' என்று தமிழக அரசின் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், கருவூலத் துறை அதிகாரியால் அனுப்பப்படும் காசோலையும், பெயர்ப் பட்டியலும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியால் தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:-
 ""டிசம்பர் மாதத்துக்கான அரசு ஊழியர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட (அவர்கள் விரும்பினால்) ஊதியம் எவ்வளவு என்பதை கணினி வழியிலான சம்பளக் கணக்கு பட்டியலில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை, நேரடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான சேமிப்புக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம். மாத ஊதியத்தை வரவு வைக்கும் போது இந்த நிதியைக் கணக்கில் செலுத்தலாம். இதுகுறித்த தகவலை மாவட்ட அதிகாரிகள், துறைத் தலைவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.