சென்னையில் இருக்கும் பிரண்டுக்கு போன் பண்ணி (லைன் கிடைக்க 30 நிமிடம் ஆச்சி) நிலைமை பற்றி கேட்டேன். தற்போது மழை இல்லையாம். ஆனால் வீட்டை சுற்றியும் மழை தேங்கி இருக்காம். பால் அரை லிட்டர் 40 ரூபாய், தக்காளி கிலோ 150. ஆனால் அதை வாங்க கூட வெளியே செல்ல முடிய வில்லை. இன்னும் இரண்டு நாளைக்கு கரண்டும் வருவதற்க்கு சந்தேகமாம். மளிகைக்கு என்ன பன்றனு கேட்டேன்.
சொன்னாம் பாருங்க பதில் அப்படியே சிலிர்த்து போச்சி... பக்கத்தில ஒரு டிபார்மெட்டல் ஸ்டோர் இருக்காம். இன்று கடை லீவுதான் மழையினால். இருந்தாலும் அருகில் வசிப்பவர்கள் அவருக்கு போன் பண்ணி சொன்னால் எல்லா பொருளையும் ஒரு கேரி பேக்கில் போட்டு தண்ணீரில் நீந்திவந்து அப்பார்மென்டுக்கு கீழே வந்து சத்தம் போடுவார் அல்லது மிஸ்டு கார் கொடுப்பார். இவர்கள் ஒரு பையை கயிற்றில் கட்டி கிழே இறக்கினால் அதில் போட்டு விடுவாராம். பணத்தை தண்ணீர் வடிந்த பிறகு கொடுத்தா போதும்னு சொல்லிட்டாராம். சீரியஸா கண் கலங்கிட்டேன்.
இந்த மாதிரி மனிதர்கள் இருக்கும் வரை நம்ப நாட்ட எந்த முடுங்கியாலும் ஒன்னும் புடுங்க முடியாதுனு சொல்லிட்டு போன வெச்சிட்டேன். வேறேன்ன சொல்ல.... மனசு நிம்மதியா இருக்கு
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.