சென்னையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் மேப் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளை அடையாளம் காணக்கூடிய வசதியைச் செய்துகொடுத்துள்ளார்கள். இதன் மூலம் கிடைக்கும் தகவல், பின்னாளில் நகரை சீரமைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். எப்படி உதவுவது?
1. இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்! ->
http://osm-in.github.io/flood-map/chennai.html#11.98/13.0338/80.2147
2. எந்த சாலை வெள்ளத்தில் இருப்பதாக மார்க் செய்ய விரும்புகிறீர்களோ, அதை ஸூம் செய்து, சாலையை க்ளிக் செய்யுங்கள். இப்போது சாலை மார்க் ஆகிவிடும்.
3. சென்னையில் வெள்ளம் பாதித்துள்ள சாலைகளை மற்றவர்கள் அடையாளம் காட்டியிருப்பதையும் பார்க்கலாம்.
ஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளை மட்டுமே மார்க் செய்ய வேண்டும். முழுவதும் ஓபன் - சோர்ஸாக தரப்பட்டுள்ள இந்த வசதியை சரியாகக் கையாண்டால், பின்னாளில் சிறப்பான பலன்களை அளிக்கும்.

- ர. ராஜா ராமமூர்த்தி
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.