Pages

Wednesday, December 2, 2015

கனமழை: நாளை காலை வரை மூடப்பட்டது சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தின் ஒடுதளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விமான சேவை நாளை காலை வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தினுள் தண்ணீர் புகுந்தது. விமான ஓடுதளம் முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது.


இதையடுத்து இந்திய விமான ஆணையம், சென்னை விமான நிலையத்தை நாளை காலை வரை மூடுவதற்கு முடிவு செய்தது.

விமானம் நிலையம் மூடப்பட்டது குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தின் அனைத்து வசதிகளும் தற்போது முடக்கப்பட்டுள்ளன என சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூ கூறினார்.

பலர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு விமான நிலைய ஆணையத் தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் ராஜூ.

மழை முற்றிலும் நின்ற பின்னர், வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும்.  இதற்காக எவ்வித கால அளவையும் நிர்ணயிக்க முடியாது என்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.