Pages

Friday, December 4, 2015

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய வசதி

சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இணைந்து, தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்காக, பல துறைகள் சார்பில் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 


இவற்றைத் தொடர்பு கொள்வதிலும், இங்கு வரும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக கிடைப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்களை, துறை அதிகாரிகள் அறிந்துகொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 15 பேர் சேர்ந்து, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பிரத்யேக தகவல் தொடர்பு மையத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், திண்டுக்கல் எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் இணைந்து உள்ளனர்.
இந்த மையத்துக்கு தகவல் தெரிவிக்க, 080400 01000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தகவல் தெரிவிக்க, 98806 55555 எண்ணிலும், 'டெலிகிராம்' ஆப் வாயிலாக தொடர்பு கொள்ள, 72597 60333 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.