Pages

Friday, December 4, 2015

வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு

வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.


இதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழையால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களின் வசதிக்கு, சென்னையில் உள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவன அலுவலகங்களில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது மற்றும் தனியார் துறையில் உள்ள, 25 காப்பீட்டு நிறுவனங்களில், நவ., 7 முதல், நேற்று வரை, 2,000 பேர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.