Pages

Monday, December 14, 2015

34 நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ளப் பாதிப்பிலிருந்துநீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர். 

'வெள்ளச் சேதம் :பற்றி கவலைப்படாமல், இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி, பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.