Pages

Friday, November 27, 2015

தேர்தல் பணிக்கான தொகை தாமதம் ஓட்டுச்சாவடி களப்பணியாளர்கள் அவதி

மத்திய அரசிடமிருந்து பெறப்படும் தேர்தல் பணிகளுக்கான செலவுத்தொகை வராததால் ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் தவிக்கின்றனர்.தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் கடந்த அக்டோபரில் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டது. பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன.
தற்போது அந்தந்த மாவட்டங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் களவிசாரணை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.இப்பணியில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சத்துணவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போக்குவரத்து, இதரச் செலவு களுக்கான தொகையை வழங்க மத்திய அரசு தாமதப்படுத்துகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழிக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.
சத்துணவு மைய ஊழியர் ஒருவர் கூறியதாவது: தேர்தல் பணி என்பது அவசரகதியில் பார்க்க வேண்டிய கட்டாயப்பணி. போக்குவரத்து, இதர செலவுகளுக்கு பணம் இல்லாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் இதை கண்டுக்கொள்ள மறுக்கிறது. தற்போது நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.