Pages

Thursday, November 19, 2015

ஒத்திவைக்கப்பட்ட பி.இ. தேர்வுகளுக்கு மறு தேதி: அண்ணா பல்கலை. அறிவிப்பு

தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விவரங்கள் பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டடவியல் பள்ளி (எஸ்.ஏ.பி.), எம்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஒத்திவைக்கப்பட்ட நவம்பர் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள் இப்போது டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.


இதுபோல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளில் ஒத்திவைக்கப்பட்ட நவம்பர் 12-ஆம் தேதி தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதிக்கும், 13-ஆம் தேதி தேர்வு டிசம்பர் 22-ஆம் தேதிக்கும், 14-ஆம் தேதி தேர்வு டிசம்பர் 24-ஆம் தேதிக்கும், 16-ஆம் தேதி தேர்வு டிசம்பர் 28-ஆம் தேதிக்கும், 17-ஆம் தேதி தேர்வு டிசம்பர் 29-ஆம் தேதிக்கும், 18-ஆம் தேதி தேர்வு டிசம்பர் 30-ஆம் தேதிக்கும், 19-ஆம் தேதி தேர்வு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும், 20-ஆம் தேதி தேர்வு 2-1-2016 அன்றைக்கும், நவம்பர் 21-ஆம் தேதி தேர்வு 4-1-2016 அன்றைக்கும் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.