பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதையொட்டி, பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, அனைவரும் தெரிந்து, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்து, கல்வித் தரத்தை உயர்த்த, 'சரன்ஷ்' என்ற இணைய இணைப்பு துவங்கப்பட்டுள்ளது.இந்த தளத்தை, அனைத்து பள்ளிகளும் பயன்படுத்துமாறு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
இதன் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள மண்டலங்களின், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வீதத்தை அறியலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர், தனியாக, 'லாக் இன்' செய்து, தேர்வு மதிப்பெண்ணை பார்க்கலாம்.மேலும், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த கருத்துகளை பின்பற்றி, பாடங்கள் நடத்த பள்ளிகள் முன்வரலாம் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.