Pages

Wednesday, November 4, 2015

ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்

பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர்.

தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இனி, தாலுகா அலுவலகங்களுக்கோ, இ-சேவை மையங்களுக்கோ மாணவர்கள் அலைய வேண்டியதில்லை; சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.