Pages

Wednesday, November 4, 2015

ஓஸோன் மண்டலம் பற்றி அறிந்து கொள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லுங்கள்: அதிகாரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தல்

"ஓஸோன் மண்டலம் குறித்து 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லுங்கள்' என்று மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. "ஓúஸான் மண்டலம் பாதிப்படைவது என்பது ஒரு சர்வதேச பிரச்னையாகும்' என்று மத்திய அரசு சார்பில் தெரிவித்ததற்கு பதிலளிக்கும் வகையில், நீதிபதி ஸ்வதந்தர் குமார் இவ்வாறு கூறினார்.


இந்தியாவில் கட்டுப்பாடின்றி வெளியிடப்படும் "ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன்' (ஹெச்எஃப்சி) வாயுவால், ஓúஸான் மண்டலம் பாதிப்படைவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, தீர்ப்பாயத் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, "ஹெச்எஃப்சியால் மட்டுமே ஓúஸான் மண்டலம் பாதிப்படைவதில்லை என சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஓúஸான் மண்டலம் பாதிப்படைவது என்பது ஒரு சர்வதேச பிரச்னையாகும்' என்று மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தீர்ப்பாய அமர்வு கூறியதாவது: ஓஸோன் மண்டலம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தியாவுக்கு எப்போது தெரியும் என்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா?

ஓஸோன் மண்டலம் குறித்து முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஓஸோன் மண்டலத்தின் முக்கியத்துவம் குறித்து 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது என்பதற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள "பூகோள சக்கரமே' சாட்சியாகும். பூமியிலிருந்து 15 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓúஸான் மண்டலத்தின் முக்கியத்துவத்தையும், அதனை காக்கும் வழிகளையும் "பூகோள சக்கரம்' உணர்த்துகிறது.
 நீங்கள் (அதிகாரிகள்) மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அதனை அறிந்து கொள்ளுங்கள் என்று தீர்ப்பாய அமர்வு தெரிவித்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.