Pages

Wednesday, November 18, 2015

ஆரோக்கியப்பச்சை மூலிகை ஆய்வில் உயிரியியல் மாணவி!

ஆரோக்கிய பச்சை மூலிகையில் உள்ள வேதிப்பொருட்கள் குறித்த ஆய்வில், காந்திகிராம பல்கலையின் உயிரியியல்துறை மாணவி சசிகலா ஈடுபட்டுள்ளார்.


சீனர்களிடையே ஜின் செங் எனப்படும் பாரம்பரிய மருத்துவ மூலிகை பிரபலம். உடல் ஆரோக்கியம், ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வேதிப்பொருட்கள் அதில் உள்ளன. அதன் வேர்கள் மூலம் சீன மருத்துவர்கள் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கண்டனர். மருத்துவ குணமுள்ள ஆரோக்கிய பச்சை மூலிகை மேற்கு மலைத் தொடரில் மட்டுமே உள்ளதை தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இம்மூலிகையின் வேதிப்பொருட்கள் குறித்த ஆய்வில் காந்திகிராம பல்கலை உயிரியல்துறை மாணவி சசிகலா ஈடுபட்டுள்ளார். 

அவர் கூறியதாவது: 

1788ல் அகஸ்தியர் மலைக்காடுகளில் இவ்வகை மூலிகை இருந்தது. இதன் தாவரவியல் பெயர் டிரைகோபஸ் ஜைலானிக்கஸ். பூமிக்குள் நீளமான தண்டினை கொண்டிருக்கும்.


வெற்றிலைக் கிழங்கு குடும்பத்தை சார்ந்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து நாடுகளிலும் இருந்தாலும், அதிக மருத்துவ குணமுள்ள டிராவன்கோரிகஸ் என்னும் ஆரோக்கிய பச்சை மூலிகை மேற்கு மலைத் தொடரில் அகஸ்தியர்(பொதிகை) மலைக்காடுகளில் மட்டுமே வளர்கிறது. இதன் பயன்பாடு 1987 வரை வெளியுலகிற்கு தெரியவில்லை.ஆராய்ச்சியாளர்கள், காணி பழங்குடிகளுக்கு ஏற்பட்ட தொடர்பால் இதன் பயன் வெளியுலகிற்கு தெரிந்தது.

இம்மூலிகையின் (பாதி பழுத்த) பழத்தை உண்பதன் மூலம் சக்தியுடன், உணவே இல்லாமல் ஆராக்கியத்துடன் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால், காந்தி கிராம பல் கலையில் அந்த மூலிகை, மற்றும் பழங்களில் உள்ள வேதிப்பொருள்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.