Pages

Wednesday, November 18, 2015

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு

உயர்கல்வி நிறுவனங்களில், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு டிச., 17ல் துவங்கும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.


பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த, எம்.ஏ., டெவலப்மென்ட் ஸ்டடீஸ் மற்றும் ஆங்கிலப் படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., நடத்துகிறது. இரண்டு படிப்புகளிலும், தலா, 45 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். ஆனால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்வர். இந்த படிப்பில் சேர, சென்னை ஐ.ஐ.டி., நடத்தும், எச்.எஸ்.இ.இ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, 2016 ஏப்ரல், 26ல் நடக்கும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், டிச., 17 முதல் ஜன., 26க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் விவரங்களை, http://hsee.iitm.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.