ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
இக்குகுழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை சில நாள்களுக்கு மன்பு மத்திய அரசிடம் அளித்தது.
இந்நிலையில் இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய பிரதமர் அலுவலக அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார். ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவற்கு சில வரைமுறைகள் உள்ளன என்ற அமைச்சர் அவை செயல்படுத்தப்படும் போது அது குறித்து பேசலாம் என்றார்.
மேலும், பிரமதர் மோடியின் 18 மாத ஆட்சியில் மத்திய பணியாளர் நலத் துறை பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது என்றார் அமைச்சர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.