மதுரை மாவட்டத்தில் 38 பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல் உத்தரவுகளை, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வழங்கினார்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓவியம், உடற்கல்வி, தையல், கணினி பிரிவு ஆசிரியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு சர்பிளஸ் பணியிடம் கணக்கெடுக்கப்பட்டு, பணிநிரவல் கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அதிராமசுப்பு, கண்காணிப்பாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். மேலுார் கல்வி மாவட்ட பள்ளிகளில் அதிக பணியிடங்கள் இருந்தன.
உசிலம்பட்டி, மதுரை கல்வி மாவட்ட ஆசிரியர்கள் அவற்றை தேர்வு செய்தனர்.இன்றும், நாளையும் உடற்கல்வி, கைத்தொழில், தையல் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.