கன்னியாகுமரி மாவட்டத்தில், பிளஸ் 2, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊக்கப்பரிசுத் தொகைகளை, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2014-15ஆம் ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து இயற்கை மரணமடைந்த ஆறுகாணி பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டன்காணி, குஞ்சுகிருஷ்ணன் காணி, திவாகரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக, தலா ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சின்னம்மாள், துணை ஆட்சியர் தி. சுப்பையா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆர். சிவதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.