மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, உதவியாளர் சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இது குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.கதிர்காமு கூறியதாவது: 2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, ஆண்- பெண் செவிலியர் உதவியாளர் சான்றிதழ் படிப்பு, விழிப்பார்வை தேர்வாய்வு பட்டயப் படிப்பு, மருத்துவ பதிவேடு, அறிவியல் படிப்பு ஆகியவைகளுக்கான விண்ணப்பங்களை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பெற செயலர், தேர்வுக்குழு சென்னை என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.250க்கான வரைவோலை எடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ( ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்கள் தவிர) பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களின் சான்றொப்பமிடப்பட்ட சாதி சான்றிதழ்கள் 2 நகல்களைக் கொண்டு வந்து கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.