"திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் மற்றும் சுப்ரமணியர் தேர் திருவிழா வெள்ளோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழக அரசின் நிலை ஆணை எண் 154 பொது (பல்வகை) துறை நாள் 3.9.2009-ல் அனுமதி அளிக்கப்பட்டபடி, திருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் அக்டோபர் 31-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை நாளான அக். 26-ல் அரசு கருவூல மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும்' என ஆட்சியர் எம். மதிவாணன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.