Pages

Monday, September 14, 2015

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணி

இந்திய அரசின்கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 02/2015 (R-1)
பணி: Scientific Assistant/B (Pathology)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 1 வருட டிப்ளமோ (DMLT)  அல்லது MLT முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant/B (Physiotherapist)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் Physiotherapy பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.

பணி: Technician/D (Dental Technician)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல் பிரிவில் பிளஸ் 2 பிரிவில் தேர்ச்சி பெற்று இந்திய டென்டல் கவுன்சிலின்கீழ் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Dental Technician பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician/C (Printing)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், அறிவியல் பாடங்களை உளளடக்கிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 இல் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Printing பிரிவில் 1 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician/B (Printing)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், அறிவியல் பாடங்களை உளளடக்கிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 இல் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Printing பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, கட்டணம் செலுத்தும் முறை, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.