Pages

Monday, September 14, 2015

சட்டப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி

மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நிறைவுற்றது. தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,252 இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு ஒரு வாரத் துக்குள் இரண்டாம் கட்ட கலந் தாய்வு நடைபெறும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.


அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் 1,252 இடங்கள் உள்ளன. இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இந்த இடங்களுக்கு சுமார் 7ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு கடந்த புதன் கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 325 பேர் அழைக் கப்பட்டிருந்தனர். இதில் 250 பேர் பங்கேற்றனர் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.