Pages

Friday, September 11, 2015

நர்சரி பள்ளிகள் மீது கல்வித்துறை கண்

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்பாடு குறித்து, கல்வித்துறை அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 30 பிளே ஸ்கூல் உட்பட, 261 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்படுகின்றன; இதில், நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்றும், அங்கீகாரம் புதுப்பித்தும், 206 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன; மீதமுள்ள, 25ல், பாதுகாப்பு மற்றும் முக்கிய விதிமுறைகளை பின்பற்றாத, 19 நர்சரி பள்ளிகளை மூட, மே, 22ல், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற, சில பள்ளிகள், செயல்படுகின்றன.


அங்கீகாரம் புதுப்பிக்காத ஆறு பள்ளிகளுக்கு, நோட்டீஸ் வழங்கிய நிலையில், இரண்டு பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் விதிமுறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; அதனால், அப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவது, கல்வித்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. மீதமுள்ள நான்கு பள்ளிகளுக்கு, அவகாசம் தரப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதுகாப்பு மற்றும் முக்கிய விதிமுறைகளின் அடிப்படையில், புதிய நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரப்படுகிறது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். நர்சரி பிரைமரி பள்ளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குறைபாடு இருக்கும் பட்சத்தில், அப்பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்; விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.