தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, சமூக பாதுகாப்பு துறையில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என, அரசு தெரிவித்து உள்ளது.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, தமிழகத்தில், 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தொடக்கப் பள்ளி, 201; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, 134; மெட்ரிக், 30; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, 2; மற்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்கள், 10 பேர், தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.சமூக பாதுகாப்புத் துறையிலுள்ள, சிறை மற்றும் நல்வழிப்படுத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருது அறிவிக்கப்படவில்லை.
'சமூக பாதுகாப்புத் துறையில், இருவருக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு தகுதியான ஆசிரியர் கண்டறியப்படாததால், பட்டியலில் அத்துறை ஆசிரியர்கள் இடம் பெறவில்லை' என அதிகாரிகள் கூறினர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.