முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு 2 நாளில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இது தொடர்பாக விரிவாக ஆலோசித்து சில முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது. முன்னாள் ராணுவத்தினரின் சில கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. சிலவற்றை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஓய்வூதியம் திருத்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது; ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருத்தியமைக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டில் அரசு உறுதியுடன் உள்ளது.
மற்ற துறை ஊழியர்களின் ஓய்வூதியம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் திருத்தியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும் முன்னாள் ராணுவத்தினருக்கு, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் சராசரியாக நிர்ணயிக்கப்படும். சராசரியை விட அதிகமாக ஓய்வூதியம் பெறுபவருக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைக்கப்படமாட்டாது. இது தொடர்பான அறிவிப்பு 2 நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டு மாதமாக நடத்தி வரும் போராட்டத்துக்கு இதன் மூலம் முடிவு வரும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.