தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பதவிகளை 2 மாதங்களுக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுனர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதில் அரசு பிறப்பித்த இருவேறு ஆணைகளின் காரணமாக சிக்கல் நிலவுகிறது.
1984-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையில் இந்த பதவிகளுக்கு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் 1990-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு ஆணையில் கலப்பு திருமணம் செய்தோர் மற்றும் விதவைகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் காலி இடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே பதவிகளை நிரப்ப வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தீர்ப்பு வழங்கப்படாததையடுத்து கலப்பு திருமணம் செய்தவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் 2 மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆனால் அது பின்பற்றபடாததால் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.