Pages

Tuesday, September 1, 2015

3 ஆண்டாக கூடுதல் புதிய பணியிடங்கள் அறிவிப்பில்லாத ஆசிரியர் பணியிடங்கள்!

தமிழகம் முழுவதும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும்
உருவாக்கப்படும், கூடுதல் புதிய பணியிடங்கள் அறிவிப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் மானியக்கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என கல்வித்துறை வட்டாரங்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ், கடந்த, 2001 முதல் 10 வரை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு வெறும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான, ஐந்து ஆசிரியர்கள் பணியிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது.


அதன் பின், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஒன்பது ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில், 2,200 மேல்நிலைப்பள்ளிகளில் வரலாறு, வணிகவியல், பொருளியல் மற்றும் கணக்குபதிவியல் பணியிடங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.

ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமன்படுத்தும் பொருட்டு, 2011-12ம் ஆண்டு, 1,591 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. 2012-13ம் கல்வியாண்டில், 1,591 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது.


இப்பணியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டவை என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பணிநியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப பணிநியமனம் செய்யப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்று வரும் ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்படுவர்.


கடந்த மூன்று ஆண்டுகளாக, காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனரே தவிர, புதிதாக பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட பள்ளி களுக்கு இதுவரை, 3,181 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அறிவியல் பாடப்பிரிவுகளே ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், புதிதாக பணியிடங்கள் உருவாக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதித்துள்ளனர்' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.