என்.சி.சி.,யில் இணைவதன் மூலம், முப்படைகளில் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஊட்டி அருகே, லாரன்ஸ் பள்ளியில், ஜூனியர் என்.சி.சி., படை துவக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை சங்கீதா சீமா வரவேற்றார்.
என்.சி.சி., மாவட்ட அலுவலர் மகேந்திர பால்சிங் ராவத், என்.சி.சி., படையை துவக்கி வைத்து பேசுகையில்,என்.சி.சி.,யில், இணைந்து செயல்பட்டால், வேலை வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். குறிப்பாக, ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படைகளில், என்.சி.சி., பிரிவுக்கென்று, பிரத்யேக இட ஒதுக்கீடு உள்ளது.
அதை, மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ராணுவத்தில், சிறந்து விளங்கிய பலர், என்.சி.சி.,யில் இருந்து வந்தவர்கள் தான். என்.சி.சி.,யில் இணைந்து செயல்படுவதன் மூலம், உடல், மனம் பலம் பெறும், என்றார்.
பின், பள்ளி வளாகத்தில், என்.சி.சி., அலுவலகத்தை திறந்து வைத்தார். பின், மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சி, பாட்டு, தபேலா, ஆர்மோனியம் உட்பட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், மாணவியரின் கதக் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.