Pages

Tuesday, August 4, 2015

கலாமை போல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை

தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு வகுப்புகள், கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கின.


முதல் இரு வாரங்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. 

அண்ணா பல்கலையிலுள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி, ஆர்கிடெக் மற்றும் வடிவமைப்பு கல்லுாரியிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் திட்டமிட்டபடி துவங்கின.


மாணவ, மாணவியரை, மூத்த மாணவர்கள் கைகொடுத்து வரவேற்றனர்; பேராசிரியர்கள் வாழ்த்தினர். வகுப்புகள் துவங்கும் முன், மாணவ, மாணவியர், அப்துல் கலாமுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாமை போல் ஆராய்ச்சிகள் மிகுந்த மாணவராகவும், கல்லுாரிக்கும், பல்கலைக்கும் நல்ல பெயர் வாங்கித் தரும் மாணவராகவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.

ஆசிரியர்கள் கூறியதாவது:

முதலாம் ஆண்டில், எப்படி வகுப்பு எடுக்க வேண்டும் என்பது குறித்து, அண்ணா பல்கலையின் பேராசிரியர் மேம்பாட்டு அமைப்பு பயிற்சி அளித்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு முதல் இரு வாரங்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்கள் நடத்தி நினைவு கூரப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.