Pages

Saturday, August 22, 2015

வகுப்பு புறக்கணிப்பு: பேராசிரியர்கள் முடிவு

அரசு கல்லுாரிகளில் பணியாற்றும், 2,000 பேராசிரியர்களுக்கு, மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.தமிழக கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், 83 அரசு கல்லுாரிகளில், 8,000 பேராசிரியர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில், கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல் போன்ற பாடங்களுக்கு, 2,000 பேர் கவுரவ பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.


இந்த ஊதியம், மூன்று மாதங்களாக தமிழக அரசால் வழங்கப்படவில்லை. அதனால், கவுரவ பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக, கல்லுாரி கல்வி இயக்குனர், உயர்கல்வி முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு பல மனுக்கள் அளித்தும் பலனில்லை. அதனால், 2,000 கவுரவ பேராசிரியர்களும் ஒட்டு மொத்தமாக வகுப்பை புறக்கணிக்க திட்டமிட்டுஉள்ளதாக, கல்லுாரி பேராசிரியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.