கல்வி மாணவர்களின் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தார். சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழாவுக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதில் தமிழக கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சி.சைலேந்திரபாபு பங்கேற்று பேசியது: மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை முடிவு செய்து முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும். கல்வி, மனிதனின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க உதவும். எனவே, கல்வியை முறையாக பயின்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு, சைலேந்திரபாபு பதிலளித்தார். மேலும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற இக்கல்லூரியின் முன்னாள் மாணவி வான்மதிக்கு மாணவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லூரி அறங்காவலர் பா.சரவணன், முதன்மை கல்வி அதிகாரி ஏ.எம்.நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.