பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் எச்சரிக்கையை தொடர்ந்து, அங்கீகாரமின்றி அறிவிக்கப்பட்ட, ஆன்லைன் கம்ப்யூட்டர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை ரத்து செய்துள்ளது.
அண்ணா பல்கலையின் தொலைதுார கல்வி மூலம், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இத்துடன், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் திறந்தவெளி சாப்ட்வேர் படிப்பும், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'இந்தியாவில் ஆன்லைனில் எந்த ஒரு பாடத்தையும் நடத்த, அனுமதி வழங்கவில்லை' என, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, அண்ணா பல்கலையின், ஆன்லைன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் சேர்க்கை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.