Pages

Wednesday, July 15, 2015

112 பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, அரசு இன்ஜி., கல்லூரிகளில், பல பாடப்பிரிவுகளில், உதவிப் பேராசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. 
இதில், விழுப்புரம், திருச்சி, திண்டிவனம், தூத்துக்குடி, திருக்குவளை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, நாகர்கோவில், காஞ்சிபுரம், திண்டுக்கல், ஆரணி, அரியலூர் ஆகிய, 13 கல்லூரிகள் மற்றும் கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள அண்ணா பல்கலை மண்டல கல்லூரிகளில், 112 இன்ஜி.,
உதவிப் பேராசிரியர்; 15 கல்லூரி நூலகர் பதவி; 11 உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு என, மொத்தம், 138 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான கல்வித்தகுதி உடையவர்கள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் கல்வித்தகுதி போன்ற விரிவான விவரங்கள்,https://www.annauniv.edu/pdf/advt_faculty.pdf என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.