ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.இதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ், முதல்வர் அலுவலகத்தில், கொடுத்துள்ள மனு:அரசுப் பணியில் இல்லாதவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களின் சங்க விவகாரங்களில், தொடர்பு வைத்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துச்சாமி மற்றும் கவுரவ பொதுச்செயலர் அணணாமலை ஆகியோர், ஆசிரியர் சங்கங்களின் தலைமை நிர்வாகிகளாக, செயல்படுகின்றனர்.
மேலும், அவர்கள் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், தி.மு.க.,வின்அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலர்களாகவும்இருக்கின்றனர். மூன்றுபேரும், தி.மு.க.,வினரின் துாண்டுதல்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை, தமிழக அரசுக்கு எதிராக, போராடத் துாண்டி விடுகின்றனர்.கடந்த, நான்கு ஆண்டு களில் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்கியதற்கு, மூன்று பேரும், நன்றி தெரிவிக்கவில்லை. இப்போது, மூன்று பேரும், சில ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, 'ஜாக்டோ' என்னும் அமைப்பை உருவாக்கி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த, ஆசிரியர்களை துாண்டி வருகின்றனர். பள்ளிக்குச் சென்று, அழைப்பு விடுக்கின்றனர்.எனவே, அரசுப் பணியில் இல்லாதவர்கள் தலைமையில் செயல்படும், ஆசிரியர்கள் சங்கங்களின், அங்கீகாரத்தை, உடனே ரத்து செய்ய வேண்டும். இவர்கள் தலைமையில் செயல்படும், 'ஜாக்டோ' அமைப்பை, தடை செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.