இந்தியாவில் ஏழைகளுக்கும் எளிதில் உயர்கல்வி கிடைக்கிறது, என இங்கிலாந்து மாணவர்கள், பேராசிரியர்கள் வியந்து பாராட்டினர். உயர்கல்வி கற்பதில் காந்திகிராம பல்கலையுடன் இங்கிலாந்து கேன்டர்பரி கிரைஸ்ட் சர்ச் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அப்பல்கலை பேராசிரியர்கள் பேட்ரிக் மேசன், நவுமி ரின்டவுல், ரசில், சூ ஆகியோர் தலைமையில் 8 மாணவர்கள் நேற்றுமுன்தினம் காந்திகிராமம் வந்தனர்.
அவர்கள் ஜூலை 17 வரை கல்வியியல், உயிரியியல், புவியியல், வயதுவந்தோர் கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்திய கல்விமுறைகளை தெரிந்து கொள்ள கிரமப்புற பள்ளி மாணவர்களிடம் உரையாடினர். அவர்கள் கூறியதாவது
கிராம வளர்ச்சியை நோக்கமாக கொண்ட காந்திய கொள்கைகள் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உள்ளது.
இதனால் கிராம மாணவர்களின் கல்வித்தரம் நன்றாக உள்ளது. இங்கிலாந்தில் பணம் அதிக செலவாகும் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வி பயில முடியும். இந்தியாவில் ஏழைகளுக்கும் எளிதில் உயர்கல்வி கிடைக்கிறது. இதற்கு காந்திகிராமம் போன்ற பல்கலைகள் உறுதுணையாக உள்ளன.
அனைத்து மாணவர்களும் கற்கும் வகையில் பாடத்திட்டங்கள் உள்ளன. இந்திய மாணவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்கின்றனர், என்றனர். காந்திகிராம பல்கலை வாழ்நாள் கல்வித்துறை தலைவர் ராஜா உடனிருந்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.