திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சத்துண வு பிரிவில் டேட்டா என்ட்ரி தாற்காலிகப் பணிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக த்தில் ஏதேனும் ஒரு பட்டம், தமிழ் ஆங்கிலம் தட்டச்சில் இளங்கலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்எஸ் ஆபிஸ் பாடத்தில் போதுமான அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணி முற்றிலும் தாற்காலிகமானது. மாதம் ஊதியம் ரூ. 6,000 வழங்கப்படும். இப்பணி மூப்பை அடிப்படையாக கொண்டு வேறு எந்த பணிக்கும் முன்னுரிமை கேட்க முடியாது. வி ரும்புவோர் ஜூலை 31-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடம் ஆட்சியர் அலுவலகம், சத்து ணவுப் பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.