Pages

Wednesday, July 29, 2015

கலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி

ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு, திரண்டுவந்த பொதுமக்கள், கலாம் படத்திற்கு மலர்களை துாவி, அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீடு முன், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள் என, அனைத்து தரப்பினரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.இவர்கள், கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், இவரது பேரன் சலீம் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர். 

கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கலாம் படம் வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான பொதுமக்கள், நேற்று திரண்டு வந்து, படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.ராமேஸ்வரம், மண்டபம் பள்ளி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து, அவரது வீட்டின் முன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்தில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.