குஜராத் அரசு மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில், ரிலையன்ஸ் குழும நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை பள்ளிப் புத்தகங்களில் சேர்ப்பது குறித்து, பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து குஜராத் மாநில பள்ளி பாடப்புத்தக வாரியத் தலைவர் நிதின் பெதானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி பாடத்திட்டத்தில் திருபாய் அம்பானி உள்ளிட்ட குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று கடந்த முறை நடைபெற்ற வாரியத்தின் கூட்டத்தில், மாநில கல்வி அமைச்சர் பூபேந்தி ரசிங் சூடாஸ்மா வலியுறுத்தினார்.
அம்பானி தவிர, தேனா வங்கியின் நிறுவனர் தேவ்கரண் நாஞ்சி உள்ளிட்ட பல தொழிலதிபர்களும் சமூகத்துக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். ஆனால் அவர்களைப் பற்றி பலருக்கும் தெரியாது. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்காக, தொழில் துறையில் முக்கிய பங்காற்றியவர்களின் பட்டியலை அளிக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் சூடாஸ்மா அறிவுறுத்தியுள்ளார்.
9-வது முதல் 12-வது வகுப்பு வரையிலான பாடத்திட்டத்திலோ அல்லது 6ஆவது முதல் 8ஆவது வகுப்பு வரையிலான பொது அறிவியல் பாடத்திலோ இந்தப் பாடங்கள் சேர்க்கப்படும். என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.