பிளஸ் 2 தேர்வு கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் எண் கட்டாயம் என்பதாலும், இணையதள வாயிலாக பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதாலும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பிளஸ் 2 மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டன. அவற்றை, அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களின் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தை ஒரே நேரத்தில் அனைவரும் பயன்படுத்தியதால், பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாயினர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களிடம் மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும், பதிவின் போது, ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்படுகிறது.
மதிப்பெண் சான்றுக்கு வரும் மாணவர்கள் ஆதார் எண் விவரங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவிப்பு ஏதும் செய்யாததாலும் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளிகளில், வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யவும், மடிக்கணினி பெறவும் ஆதார் எண் அவசியம், எனவே, ஆதார் எண்ணை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.