Pages

Sunday, July 19, 2015

சென்னையில் 1.70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களிடம் எத்தனை பேருக்கு ஆதார் அடையாள அட்டை எண் உள்ளது? எத்தனை பேருக்கு இல்லை? என்ற விவரங்களை உடனடியாக சேகரித்து அனுப்பும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சென்னையில் ஜார்ஜ்டவுன், ராயபுரம், பெரியமேடு, பெரம்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், தியாகராயநகர், அடையாறு, மயிலாப்பூர் என 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 

இதில் சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என மொத்தம் 849 பள்ளிகளில் 1 லட்சத்து 26 பேருக்கு ஆதார் அட்டை உள்ளன. 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து விண்ணப்பிக்காதவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆதார் எண் வழங்கப்பட உள்ளது. அதோடு, ‘ஸ்காலர்ஷிப்’ எனப்படும் கல்வி உதவித்தொகை வழங்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துவருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.