Pages

Monday, June 15, 2015

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் பல்வேறு புகார்கள் காரணமாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.


கடந்த மே மாதம் 5ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 6.3 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பு சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பளித்துள்ளது.

அதில் கடந்த மே மாதம் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்றும்,அடுத்த நான்கு வாரத்திற்குள் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் ஒரு மாணவர் முறைகேடாக பயனடைந்தாலும் தவறுதான் என நீதிபதிகள் தீர்ப்பின் போது கருத்து தெரிவித்தனர்.​

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.