ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார்.அவர் கூறியதாவது:
தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக அறிவியல் பாடம் பயின்றவர்களையே நியமிக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் இல்லாத நிலையில், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. இவர்களுக்கு தொகுப்பூதிய பணிக்காலம் பணிமுறிவு காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை பணிக்காலமாக அரசு அறிவிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், என்றார். மாநில பொருளாளர் செல்லையா, துணைப் பொதுச் செயலாளர் முகமது அயூப் உடனிருந்தனர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.