Pages

Thursday, June 25, 2015

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செய்தி குறிப்பு : பணிநிரவல் கலந்தாய்வு குறித்து செய்தி

அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை- 6 மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களின் செயல் முறைகள் PRO.RC.NO 175/PTI/A15/2015  தேதி 6/15  மேற்கண்ட செயல்முறையில் கூறியுள்ள தகவல்கள். அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரவல் என்பது 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கை
அடிப்படையில் தகுதி வாய்ந்த பள்ளி, தகுதி இன்மை பள்ளி என்று அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மூலம் 26.06.2015 முதல் 08.07.2015 வரை  ஒதுக்கீடூ செய்த தேதியில் சென்னை, மாநில திட்ட அலுவலகத்தில் (Workshop) நடைபெற உள்ளது. ஆனால் மேற்கண்ட தேதியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது என்று தவறாக புரிந்து  கொண்டுள்ளீர்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் பணி நிரவல் நடைபெறும் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அதற்கு முறையாக அறிவிப்பு செய்து நடைபெற உள்ளது என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.
என்றும் அன்புடன்
சிறப்பு தலைவர்- சுந்தர்கணேஷ், தலைவர் - முருகதாஸ், செயலாளர்- ஜெகதீசன், பொருளாளர்- இளங்கோவன், மாநில செய்தி தொடர்பாளர்- பழனிவேல்ராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.