Pages

Friday, June 26, 2015

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில்; சான்றிதழ் சரிபார்ப்பு

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், புதுச்சேரி மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடந்தது. ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அகில இந்திய அளவில், 1லட்சத்து 37 ஆயிரத்து 738 பேர் ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தனர்.அதற்கான நுழைவு தேர்வு,கடந்த 7ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.


பொதுப்பிரிவினருக்கு 50 இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 28, ஆதிதிராவிடர் 16, பழங்குடியினர் (எஸ்.டி.) 11 இடங்களும், புதுச்சேரி மாணவர்களுக்கு 40, என்.ஆர்.ஐ.,மாணவர்களுக்கு 5 இடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று முன்தினம் நடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட 40 இடங்களில், புதுச்சேரி பொது -23, ஓ.பி.சி.,-11, எஸ்.சி.,-6,இடங்களும், என்.ஆர்.ஐ.- 5, அகில இந்திய ஒதுக்கீட்டில் எஸ்.சி., 16, பழங்குடியினர் (எஸ்.டி.,) 11இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 144 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
தேர்வான மாணவர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் இன்றும் நாளையும் நடக்கிறது. மாணவர்களுக்கான சேர்க்கை கடிதம் வரும் 29ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஜூலை 1ம் தேதி எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.