Pages

Saturday, June 13, 2015

கல்லூரியில் காலியிடங்களுக்கு சீட்டு போடும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் இழுபறி

அரசு அறிவியல் மற்றும் கலை கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், இன்ஜி., நர்சிங் படிப்புக்கு செல்வதால், அந்த காலியிடங்களை மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்ப அரசு கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. இதை அறிந்த அரசியல் கட்சியினர் அந்த இடங்களுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர்.


தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான கவுன்சிலிங், கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தது. வரும் ஜூன் 18-ம் தேதி கல்லுாரிகள் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டுகளில், இன்ஜி., நர்சிங், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு 'கவுன்சிலிங்' நடக்கும்போதோ அல்லது நடந்து முடிந்த பிறகோ 'கவுன்சிலிங்' நடந்தது.

இருக்கின்ற காலியிடங்களுக்கு ஏற்ப, அடுத்த கட்ட கவுன்சிலிங்கும் உடனே நடந்து முடிந்தது. இதனால், அரசியல் கட்சியினரின் சிபாரிசை கண்டு கொள்ளாமல், கல்லுாரிகள் கவுன்சிலிங்கை நடத்தி முடித்தன.

இந்த ஆண்டு, எல்லாவற்றுக்கும் முதலாக கலை, அறிவியல் கல்லுாரி கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பலர், கவுன்சிலிங்கில் பங்கேற்று விரும்பிய துறையை தேர்வு செய்தனர். தொடர்ந்து கட்டணமும் செலுத்தினர்.

மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசு கல்லுாரிகளில் சேர்ந்த ஒரு சில மாணவர்கள், இன்ஜி., மற்றும் நர்சிங் படிப்பில் சேர ஆர்வம் காட்டி, தங்களுடைய சான்றிதழை கல்லுாரிகளிலிருந்து திரும்ப பெற்று வருகின்றனர்.

இதனால், ஏற்படும் காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த கல்லுாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.இதை அறிந்த அரசியல் பிரமுகர்கள், அந்த இடங்களை தங்கள் ஆதரவாளர்களுக்கு வாங்கி கொடுக்கும் வகையில் சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர். முதற்கட்ட கவுன்சிலிங்கை 'மெரிட்' அடிப்படையில் நடத்திய, கலை கல்லுாரிகள், மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கை நடத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த காலியிடங்களையும் 'மெரிட்' அடிப்படையில் கவுன்சிலிங்கில் நிரப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.