Pages

Saturday, June 13, 2015

பிளஸ் 2 மறு மதிப்பீடு வரும் 15ல் முடிவு வெளியீடு

பிளஸ் 2 தேர்வில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், மறு கூட்டலுக்கு 2,835 பேர் விண்ணப்பித்ததில் 696 பேருக்கும் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த 3,502 பேரில் 2,782 பேருக்கும் மதிப்பெண் மாற்றம் உள்ளது.


இந்த முடிவுகள் வரும், 15ம் தேதி http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மதிப்பெண் வராதவர்களுக்கு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு வரும், 16ம் தேதி தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.