அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை, சரிபார்த்துக் கொள்ள அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை கலந்தாய்வு, வரும், 28ம் தேதி துவங்குகிறது. முதல் நாளில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.இதற்கு, 2,099 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 56 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,457 மாணவர்; 586 மாணவியரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு கேட்போர், தங்கள் கல்வி மற்றும் விளையாட்டு சாதனை சான்றிதழ்கள் சரியாக ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதை, சரிபார்த்துக் கொள்ள அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. அண்ணா பல்கலை இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை பதிவு செய்தால், தாங்கள் அளித்துள்ள சான்றிதழ்களின் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.