Pages

Friday, June 26, 2015

அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள்

காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கான, ஏப்.2015-ல், நடந்த அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவுகளுக் கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

இளங்கலை பாடப்பிரிவில் பி.ஏ., (தமிழ், ஆங்கிலம், ஆங்கிலம் தொழிற்சார் கல்வி, அரபிக், வரலாறு,அரசியல் அறிவியல்), பி.லிட்., தமிழ், பிஎஸ்.சி., (கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல்,தாவரவியல், விலங்கியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், மென் பொருளியல்,நுண்ணுயிரியியல், உயிர் வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், உயர் தொழில் நுட்பவியல்,நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வு தொழில் நுட்பம், உயர் விலங்கியல் மற்றும் விலங்கு தொழில் நுட்பவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், விலங்கியல் - தொழிலக நுண்ணுயிரியல்,விஷூவல் கம்யூனிகேஷன்), பி.சி.ஏ., பி.காம்., பி.காம்., (சி.ஏ., சி.எஸ்.,) பி.பி.ஏ., பி.பி.இ. மற்றும் பி.ஏ.,பொருளியல்.

டிப்ளமோ பாடப்பிரிவில், டி.ஓ.எம். டி.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ.,. முதுகலை பாடப்பிரிவில் எம்.ஏ., (தமிழ்,ஆங்கிலம்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிர் வேதியியல்,மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், நுண்ணுயிரியல்), எம்.காம்., எம்.காம்., (சி.ஏ.,) எம்.ஏ., (வரலாறு,பொருளாதாரம்), முதுநிலை சமூகப்பணி, எம்.எஸ்.சி., (மின்னணுவியல்) எம்.எஸ்.சி., (உயர் தொழில் நுட்பவியல்), ஆகியவற்றுக்கான தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in www.kalvimalar.com என்ற இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (4.7.15)-க்குள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலை கழக இணையதளத்தின் மூலம் பெற்று மறு மதிப்பீடு கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலையை, பதிவாளர், அழகப்பா பல்கலை கழகம்,காரைக்குடி என்ற பெயரில், தேர்வு பிரிவுக்கு விண்ணப்பிக்கமாறு தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.