உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டும் தவறிவிட்டன. கடந்த ஆண்டு 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற இந்திய மருத்துவக் கழகம் அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி, திருச்சி, அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி சேலம், மாதா மருத்துவக் கல்லூரி தண்டலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெடிக்கல் சயின்ஸ் அன்ட் ரிசர்ச், ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை ஆகிய 5 கல்லூரிகளும் இந்த ஆண்டும் அனுமதி பெற தவறிவிட்டன.
மீதமுள்ள 8 கல்லூரிகளும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.